மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் கைது
- ரூ.31,120 பறிமுதல் செய்தனர்
- சேவல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோைவ புறநகர் போலீசாருக்கு பல்வேறு இடங்களில் மெகா சூதாட்டம் நடைப்பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கோமங்கலம் போலீசார்கடிமேடு பகுதியில் சோதனை செய்தனர். அங்கு 8 பேர் ரூ.21, 970 வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி போலீசார் பொங்காலியூர் பகுதியி ல்சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 4 பேரை கைது செய்து ரூ.2300-யை பறிமுதல் செய்தனர்.ஆனைமலையில் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2350-யை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பேரூர் மத்திப்பாளையத்தில் 4 பேர், நெகமம் அடுத்த செங்குட்டைப்பாயைத்தில் 2 பேர், மதுக்கரை வலுக்குப்பாறையில் 4 பேர், பெரிய நாயக்கன்பாளையத்தில் 8 பேர் ஆகிய 18 பேரை சேவல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7,800 பறிமுதல் செய்யப்பட்டது.
பொங்கல் விடுமுறை யான நேற்று ஒரே நாளில் மெகா சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 41 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31,120-யை பறிமுதல் செய்தனர்.