உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது 3742 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-08-06 08:58 GMT   |   Update On 2022-08-06 08:58 GMT
  • கடலூர் மாவட்டத்தில் 3742 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
  • பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொதுமக்களை பாதிக்காமல் தடுக்கும் பொருட்டு சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை (7 ந்தேதி) 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இரண்டாவது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு மட்டுமே 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் விலையில்லா கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்ட த்தில் தற்போது 12,48,000 பயனாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி யினைசெலுத்திக் கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்ட த்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொ ள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 

Tags:    

Similar News