உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை 'அபேஸ்'

Published On 2023-01-19 15:16 IST   |   Update On 2023-01-19 15:16:00 IST
  • நகைக்கு பதில் பேக்கில் கூலாங்கற்களை வைத்து கொடுத்தனர்.
  • வீட்டிற்கு வந்து பேக்கில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி அமுதா (வயது 65). சம்பவத்தன்று இவர் பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வைரம் நகரில் அவர் சென்றபோது அங்கு இருந்த 2 மர்ம நபர்கள், நகைகளை கழுத்தில் அணிந்து இருக்காதீர்கள். யாராவது திருடி கொண்டு போய் விடுவார்கள்.

எங்களிடம் கழற்றி கொடுங்கள். நாங்கள் பாதுகாப்பாக பேக்கில் வைத்து தருகிறோம் என அமுதாவிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய அமுதா தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை கழட்டி கொடுத்தார்.

பின்னர் அந்த மர்ம நபர்கள் அமுதாவின் கவனத்தை திசை திருப்பி பேக்கில் கூலாங்கற்களை வைத்து கொடுத்தனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பேக்கில் நகைகள் இல்லாததைக் கண்டு அமுதா அதிர்ச்சி அடைந்தார்.

அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

இது குறித்து அவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News