உள்ளூர் செய்திகள்

சிகிச்சை பெற்றுவருபவர்களின் குடும்பத்தினரிடம் சிவபத்மநாதன் உதவித்தொகையை வழங்கியபோது எடுத்தபடம்.


கரடி தாக்கி சிகிச்சை பெற்று வரும் 3 பேருக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி- சிவபத்மநாதன் வழங்கினார்

Published On 2022-11-07 07:15 GMT   |   Update On 2022-11-07 07:15 GMT
  • ஆழ்வார்குறிச்சி அருகே 3 பேரை கரடி ஒன்று கடித்து குதறியது.
  • மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிவபத்மநாதன் சந்தித்து நலம் விசாரித்தார்.

தென்காசி:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், சைலப்பன் மற்றும் கருத்தலிங்கபுரம் வைகுண்ட மணி ஆகிய 3 பேரை கரடி ஒன்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவ உதவி தொகை வழங்கினார்.

அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.45 ஆயிரம் மருத்துவ உதவி தொகையாக வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் விரைவில் நிவாரண தொகை பெற்றுத் தரப்படும் எனவும் சிவபத்மநாதன் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார். முன்னதாக அவர் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் பேசினார். உயர் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான முழு உதவியும் பெற்று தரப்படும் என அவர் கூறினார். அப்போது நாகேந்திரன் மகன் சங்கரநாராயணன், சைலப்பன் மகன்கள் பாஸ்கர் , மணிகண்டன், வைகுண்ட மணி மகள் அம்பலம் , மாரியப்பன், பொன் மோகன், மாயாண்டி மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News