உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு திருடிய 3 பேர் கைது
- டலூர் அடுத்த பெரியபட்டில் தனியார் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
- இந்த தொழிற்சாலை இயங்காத காரணத்தினால் தொழிற்சாலைகளில் இருந்து டன் கணக்கில் இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த பெரியபட்டில் தனியார் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலை இயங்காத காரணத்தினால் தொழிற்சாலைகளில் இருந்து டன் கணக்கில் இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருடி வருகின்றனர்இந்த நிலையில் இன்று அதிகாலை தனியார் தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை 3 பேர் கொண்ட கும்பல் திருடிக் கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலை நிர்வாகி சாமிநாதன் என்பவர் பார்வையிட்டு 3 பேரை பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் அவர்களிடமிருந்து 150 கிலோ இரும்பு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் ஆலப்பாக்கம் சேர்ந்த தீனதயாளன் (வயது 36), தீர்த்தனகிரி சேர்ந்தவர்கள் தட்சிணாமூர்த்தி (50), குமார் (40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.