மும்ைப தொழில் அதிபரிடம் 3 கிலோ நகை மோசடி
- 8 கிலோவுக்கு பணம் வாங்கி 5 கிலோ தங்கம் மட்டுமே அனுப்பினர்
- உக்கடத்தை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை
கோவை.
மும்பை விதல்வாடி பகுதியை சேர்ந்தவர் உத்தம்சவ் (வயது 44). இவர் கோவை செல்வபுரம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் மும்பையில் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முன்னா மண்டேல், நியாஸ்மாலிக், மாசின்மாலிக் மற்றும் ஜெயிரூன்மாலிக் ஆகிய 4 பேரும் என்னை தொடர்பு கொண்டனர்.
அப்போது நாங்கள் கோவையில் சுத்த தங்க கட்டிகளை விற்பனை செய்து வருகிறோம் என்று கூறினர்.
இதை நம்பிய நான் அவர்களிடம் 8 கிலோ தங்கம் வேண்டும் என்று கேட்டேன். இதற்கு உண்டான பணத்தை செலுத்தி விட்டேன்.
ஆனால் அவர்கள் எனக்கு 5 கிலோ தங்கம் மட்டுமே அனுப்பி வைத்தனர். மீதம் உள்ள 3.265 கிலோ தங்கத்தை ஒப்படைக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.