உள்ளூர் செய்திகள்
கார் கவிழ்ந்தது

நடுரோட்டில் கார் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

Published On 2022-06-04 14:58 IST   |   Update On 2022-06-04 14:58:00 IST
கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்
ஊட்டி, 
கர்நாடகா மாநிலத்தில் இருந்து 5 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்களது கார் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் பகுதியில் சென்று ெகாண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்தது. காரில் இருந்த 5 பேரும் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். 

அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காரில் சிக்கிய 5 பேரையும் மீட்டனர். அவர்களில் 3 பேர் சிறுகாயங்களுடன் தப்பினர்.  ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குறுகலான  இடத்தில் விபத்து ஏற்பட்டதால்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கவிழ்ந்த கார் மீட்கப்பட்டு வாகன போக்குவரத்து சீரானது. 
Tags:    

Similar News