உள்ளூர் செய்திகள்
.

ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுவனை பைக் ஓட்ட வைத்த தந்தை மீது வழக்கு

Published On 2022-06-04 09:16 GMT   |   Update On 2022-06-04 09:16 GMT
ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 7 வயது சிறுவனை பைக் ஓட்ட வைத்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நாச்சனம்பட்டி பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40), பைக் மெக்கானிக்.  இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு கீர்த்திகா (15), கேசிகா (13) என்ற மகள்களும்,  மோகித் (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் தந்தையிடம் மகன் மோகித் பைக் கேட்டார். இதனால் தங்கராஜ்    பழைய பைக்கை வாங்கி அவற்றை மகன் ஓட்டும்படி சிறியதாக  மாற்றி வடிவமைத்தார்  .  கியர் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலில்  40 கி.மீ. தூரம் செல்லும் படி 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரேஸ் பைக் போல  அதனை உருவாக்கினார். ெதாடர்ந்து மகனுக்கு அதனை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில்   சேலம்பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில்  ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான   மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

இதற்கிடையே  தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் சிறுவன் தந்தையை அமர வைத்து பைக் ஓட்டும் வீடியோ பரவியதால் அதை பார்க்கும் சிறுவர்கள் இது போன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

அதனால் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.   அதன்படி தங்கராஜ் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்   போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News