உள்ளூர் செய்திகள்
நகை பறிப்பு

திருவள்ளூர் தேரோட்டத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

Update: 2022-05-13 09:10 GMT
திருவள்ளூர் தேரோட்டத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் திருவள்ளூரில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தார். நேற்று அவர் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் மர்ம நபர் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News