உள்ளூர் செய்திகள்
கைது

ஆரணி அருகே சரக்கு வேனில் கடத்திய 1 1/2 டன் ரேசன் அரிசி பறிமுதல்- டிரைவர் கைது

Update: 2022-05-13 07:16 GMT
ஆரணி அருகே சரக்கு வேனில் கடத்திய 1 1/2 டன் ரேசன் அரிசி கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையத்தை அடுத்த ஆரணி அருகே உள்ள போந்தவாக்கம் கிராமம், புதுவாயல் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போந்த வாக்கம் கிராமத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி சென்ற ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 1 1/2 டன் எடை கொண்ட ரேசன் அரிசி 32 மூட்டைகளில் கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து வேன் டிரைவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News