உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

கடலூர் அருகே இருதரப்பினர் மோதல்- 12 பேர் மீது வழக்கு

Update: 2022-05-03 10:20 GMT
கடலூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே காராமணிக்குப்பம் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவரும் இவரது நண்பர்களான மணிகண்டன், பிரசாந்த் ஆகியோர் வெள்ளகேட் பகுதியில் சாப்பிடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வெள்ள கேட் எம்ஜிஆர் சிலை அருகே மோட்டார் சைக்கிளில் மற்றொரு வாலிபர் வந்து கொண்டிருந்தார். அப்போது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோட்டார் சைக்கிளை இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் திடீரென்று மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் தங்களது நண்பர்களை அழைத்து சம்பவ இடத்தில் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ராஜ்குமார், மணிகண்டன், கந்தன் ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பில்லாலி சேர்ந்த விக்கி விஜய் பிரபு மற்றும் 8 பேர் மீதும், கந்தன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தோட்டப்பட்டு சேர்ந்த மணி, காராமணிக்குப்பம் சேர்ந்த ராஜ்குமார், நெல்லிக்குப்பம் சேர்ந்த மணிகண்டன், கீழ் பட்டாம்பாக்கம் சேர்ந்த பிரசாந்த் மற்றும் பலர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News