உள்ளூர் செய்திகள்
மோசடி

கடலூர் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 1.80 லட்சம் ஏமாற்றிய வாலிபர்

Update: 2022-05-03 10:19 GMT
கடலூர் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 1.80 லட்சம் ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:

கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 29). இவரிடம் திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் சாமி என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் வங்கி மூலம் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆனால் பணம் வாங்கி இதுநாள் வரை வேலை வாங்கித் தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டதற்கு தர முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சண்முகம் சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் சாமியைத் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News