உள்ளூர் செய்திகள்
நகைக்கடன் தள்ளுபடி மேல்முறையீட்டு மனுக்கள் வழங்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி மேல்முறையீட்டு மனுக்களை வழங்கலாம் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் கூறினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணையின்படி பொது நகைக் கடன் தள்ளுபடி திட்டம் 2021 - ன் கீழ் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் https://virudhunagar.nic.in என்ற வலை தளத்திலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வலைதளமான www.vrdccbank.in-லும் 8.4.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி தள்ளுபடிக்கு தகுதியான பட்டியல் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒருமாத காலத்திற்குள் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரி வித்துள்ளார்.