உள்ளூர் செய்திகள்
மனைவி தூக்குப்போட்டு தற்கொலை வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் , நெசவு தொழிலாளி.இவரது மனைவி சாந்தி (வயது39). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இந்த நிலையில் பாலமுருகன் தனக்கு குழந்தை இல்லாததற்கு மனைவிதான் காரணம் என்பது போல் பேசி வந்துள் ளார். இதனால் கணவன்&-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 23ந்தேதி பாலமுருகன் தென்காசி திருமலைபகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து மனைவியை போனில் அழைத்த போது அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அவர் தொடர்புகொண்டு பேசியபோது சாந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக கிடப்பது தெரிய வந்தது.இதுபற்றிய புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலமுருகனை கைது செய்தனர்.