உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி முகாம்

நீலகிரியில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் அம்ரித் வேண்டுகோள்

Published On 2022-01-23 12:06 IST   |   Update On 2022-01-23 12:06:00 IST
நீலகிரியில் 301 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி:

ஊட்டியில் ஹில் பங்க் பகுதியில் நடைபெற்ற கொரோனா       தடுப்பூசி  சிறப்பு   முகாமை   கலெக்டர் அம்ரித்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
 
  தற்போது, கொரோனா தொற்று   அதிக  அளவில் பரவி   வருவதால்,   வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களிடம், வீடுகளுக்கு அருகிலேயே நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடமும், அங்கு நின்ற பொதுமக்களிடமும் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.  
 
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி,  ஊட்டி  வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி,  வட்டாட்சியர் ராஜசேகரன், நகர்  நல அலுவலர்  ஸ்ரீதரன்,  வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை வெளியிடப்பட்ட   அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்றின் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊட்டியைச் சர்ந்த  65 வயது பெண் உயிரிழந்துள்ளார். 

சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 35,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Similar News