உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஊழியர்களுக்கு தொற்று- குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது

Published On 2022-01-20 09:14 GMT   |   Update On 2022-01-20 09:14 GMT
பூங்கா ஊழியர்கள் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் வருவார்கள்.

தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுற்றுலா தலங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பணிபுரியக் கூடிய 16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.

மேலும் தொற்று உறுதியான ஊழியர்களுடன் வேலை பார்த்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களுக்கு தொற்று உறுதி காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடி கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வருகிறார்கள்.

Tags:    

Similar News