உள்ளூர் செய்திகள்
பொங்கல் கொண்டாட்டம்

முதுமலை யானைகள் முகாமில் பொங்கல் கொண்டாட்டம்

Published On 2022-01-16 06:16 GMT   |   Update On 2022-01-16 06:16 GMT
பொங்கலையொட்டி முதுமலை யானைகள் முகாமில் பொங்கல் கொண்டாடப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

முகாமில்  உள்ள 11 வளர்ப்பை யானைகளும், அபரணியம் முகாமில் உள்ள 17 யானைகள் என 28 வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து, சந்தனம் பூசி, யானைகளுக்கு மலர்மாலை சூடி அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. 

அப்போது வளர்ப்பு யானைகளுக்கு மிகவும் பிடித்த கரும்பு, வெள்ளம், அண்ணாச்சி பழம், தேங்காய் உட்பட விருப்ப உணவுகளை யானைகளுக்கு வழங்கி பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அமிரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண், வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், மனோஜ் குமார், மாரியப்பன், முரளி உள்பட வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News