உள்ளூர் செய்திகள்
சுற்றுலா தலத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள்

2 நாட்களில் ஊட்டி சுற்றுலா தலங்களை 11 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

Published On 2022-01-16 11:40 IST   |   Update On 2022-01-16 11:47:00 IST
பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது
ஊட்டி:

நீலகிரியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் வழக்கமான நேரத்துக்கு பதிலாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இருப்பினும் பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஊட்டி அரசு  தாவரவியல் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் சுமார் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். 
அதேபோல, ரோஜா பூங்காவுக்கு 700 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 124 பேரும், மரவியல் பூங்காவுக்கு 50 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 900 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 200 பேரும், கல்லார் பழப்பண்ணைக்கு 200 பேரும் வந்திருந்தனர்.

நேற்று  ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 4 ஆயிரம் பேரும், ரோஜா பூங்காவுக்கு 1,200 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 200 பேரும், மரவியல் பூங்காவுக்கு 80 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 1,200  பேரும், காட்டேரி பூங்காவுக்கு 500 பேரும், கல்லார் பழப் பண்ணைக்கு 500 பேரும் வந்திருந்தனர். 2 நாட்களில் மட்டும் ஊட்டி சுற்றுலா தலங்களை 11,854 பேர் கண்டு ரசித்துள்ளனர்

Similar News