உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு 75 படுக்கைகள் தயார்
நீலகிரியில் நாள்தோறும் 1500 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 1500 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களை சுகாதார துறை, வருவாய் மற்றும் போலீசாரும் இணைந்து கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
மாநில அரசு நேற்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என சில கட்டுப்பாடுகளை விதித்தது. நிலைமையை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுபற்றி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில் மாநில அரசு உத்தரவுப்படி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊட்டியில் 250, கூடலூரில் 200, குன்னூரில் 200, கோத்தகிரி 100, என 750படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது என்றார்.