செய்திகள்
கைது

தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2021-11-13 17:22 IST   |   Update On 2021-11-13 17:22:00 IST
தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை ஏ.ஒய்.ஏ. நாடார் ரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக தஞ்சை கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 45) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதேபோல் தஞ்சை தெற்கு போலீசார் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமாநகரில் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வண்டிக்கார தெருவை சேர்ந்த சரவணன்(33) என்பதும், லாட்டரி சீட்டுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.200 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News