இன்றைய ராசிபலன் 18.1.2026: இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் கூடும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
தடைகள் அதிகரிக்கும் நாள். தனவரவில் பற்றாக்குறை ஏற்படும். பிறருக்காக பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் உண்டு. தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.
மிதுனம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர் பகை உருவாகும். வாங்கல், கொடுக்கல்களில் ஏமாற்றம் ஏற்படலாம். சகோதர வழியில் விரயம் உண்டு.
கடகம்
இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடர முயற்சிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை.
கன்னி
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பயணங்களால் பலன்உண்டு. உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
துலாம்
செல்வ நிலை உயரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூர தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு. நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
தனுசு
யோகமான நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மகரம்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கம் ஆவீர்கள்
கும்பம்
நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாற எடுத்த முயற்சி பலன் தரும். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
மீனம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் மாற்றம் செய்ய நேரிடும்.