செய்திகள்
மன்னார்குடியில் பா.ம.கவினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தரக்கோரி மன்னார்குடியில், கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-10 19:15 IST   |   Update On 2021-11-10 19:15:00 IST
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தரக்கோரி மன்னார்குடியில் கொட்டும் மழையில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மன்னார்குடி:

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபாலன் கலந்து கொண்டு பேசினார். இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், பா.ம.க மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் வினோத், மன்னார்குடி நகர துணை செயலாளர் கருணாநிதி, நகர இளைஞரணி தலைவர் வசந்த், வன்னியர் நகர செயலாளர் அரவிந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வன்னியர்களுக்கு உரிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது மழை கொட்டியது. அதில் நனைந்தபடி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News