செய்திகள்
மின்சாரம் துண்டிப்பு

சென்னையில் 12,200 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

Published On 2021-11-10 10:43 IST   |   Update On 2021-11-10 10:43:00 IST
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புளியந்தோப்பு, பெரம்பூர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை:

சென்னையில் முக்கிய பகுதிகளில் தரையில் புதைக்கப்பட்ட கேபிள் வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. மற்ற இடங்களில் மின் கம்பங்கள் மூலமாக சப்ளை செய்யப்படுகின்றன.

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தண்ணீர் தரைவழி மின்சார கேபிள்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் மின் கம்பங்களிலும் கசிவுகள் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாகவும் வீடுகளில் மின்கசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்களின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை 206 டிரான்ஸ்பார்மர்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அவை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள 12,200 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நேற்று இதே போல 96 டிரான்ஸ்பார்மர்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் 4,650 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நிலைமை சீரான பகுதிகளில் மின்சப்ளை மீண்டும் வழங்கப்பட்டது.

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புளியந்தோப்பு, பெரம்பூர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News