வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து வீடு வீடாக கணக்கெடுப்பு பணி தொடங்கியது
வேலூர்:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
இதையடுத்து தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் 65 சதவீதம்பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மீதமுள்ள 35 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம், செலுத்தாதவர்கள் விவரம் அவர்களுடைய ஆதார் எண் செல்போன் எண் தடுப்பூசி செலுத்தாததற்கான காரணங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன. தடுப்பூசி போடாதவர்களின் விவரங்கள் சேகரித்த பின்பு சிறப்பு முகாம்களுக்கு அழைத்து தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.