சினிமா செய்திகள்

ரேஸ் களத்தில் நெகிழ்ச்சி..! குட்டி ரசிகருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட அஜித் - வைரலாகும் க்யூட் வீடியோ

Published On 2026-01-21 18:30 IST   |   Update On 2026-01-21 18:30:00 IST
ரேஸிங் போட்டிகளில் அஜித் பஙகேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல், ஸ்ரீலீலாவும் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகின.

தொடர்ந்து, அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்தனர்.

பிரபலங்களுக்கு இடையே, அஜித்தின் ரசிகர்களும் அவரை சந்தித்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கார் ரேஸ் களத்திற்கு அஜித்தின் குட்டி ரசிகர் ஒருவர் வருகை தந்தார்.

அப்போது, அந்த குட்டி ரசிகரின் ஷூவில் லேஸ் அவிழ்ந்திருந்ததை கண்ட அஜித், உடனே குணிந்து ஷூ லேஸை கட்டிவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News