செய்திகள்
காட்பாடி பகுதி ஏரிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

‘நிவர்’ புயல் எதிரொலி- காட்பாடி பகுதி ஏரிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2020-11-26 09:10 GMT   |   Update On 2020-11-26 09:10 GMT
‘நிவர்’ புயல் காரணமாக காட்பாடி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.












காட்பாடி:

‘நிவர்’ புயல் காரணமாக காட்பாடி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்பாடி தாலுகாவில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குகையநல்லூர் ஏரி, திருவலம் அருகே உள்ள வீரம் தாங்கல் ஏரி ஆகியவற்றை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதா? என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, கரைகளை பலப்படுத்த அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி செயற் பொறியாளர் விஸ்வநாதன், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News