செய்திகள்
கோப்புப்படம்

புதுக்கோட்டையில் இடி தாக்கி 4 பேர் பலி

Published On 2019-10-15 11:14 GMT   |   Update On 2019-10-15 11:23 GMT
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூரில் இடி தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (17-ந்தேதி) தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் காணப்படும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலோர தமிழகத்தின் வளி மண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவியது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வைத்தூர் கிராமத்தில் வயலில் வேலை பார்த்த போது இடி தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இடி தாக்கியதில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News