செய்திகள்

மனைவிக்கு ஆதரவாக பிரசாரம்: பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

Published On 2019-04-10 10:46 GMT   |   Update On 2019-04-10 10:46 GMT
பாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் இன்று தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
சென்னை:

ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.

அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.

தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினர்.

இந்நிலையில், நீதிமன்ற தண்டனையால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என அ.ம.மு.க.வின் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்படுகிறது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
Tags:    

Similar News