செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 116 பேர் மீது வழக்கு

Published On 2019-03-18 10:40 GMT   |   Update On 2019-03-18 10:40 GMT
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
கோவை:

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை மீறி போராட்டங்கள் நடந்து வருகிறது.

நேற்று பொள்ளாச்சி மற்றும் கோவையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஸ்கீம் ரோட்டில் பெண்கள் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நூர் முகம்மது தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போல சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியினர் கணபதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 5 பெண்கள் உள்பட 14 பேர் மீது மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூவர் திடலில் நாம் தமிழர் கட்சியினர் தெற்கு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 9 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் செயலாளர் முகம்மது ஷானவாஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 40 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 23 பெண்கள் உள்பட 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது வரை பொள்ளாச்சி பாலியல் விவகார போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #PollachiCase
Tags:    

Similar News