செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே விபத்து- பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்

Published On 2019-02-08 15:49 IST   |   Update On 2019-02-08 15:49:00 IST
அருப்புக்கோட்டை அருகே இன்று காலை வேன் மீது கார் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலையம்பட்டி:

மதுரையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது தலைமையில் 7 பேர் சிந்தலக்கரையில் உள்ள கோவிலுக்கு இன்று காலை ஆம்னி வேனில் புறப் பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் ஆம்னி வேன் சென்று கொண்டி ருந்தது. அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் வந்த ஒரு கார் பயங்கரமாக வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரும், வேனும் ரோட்டோரமாக பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

ஆம்னி வேன், காரில் இருந்தவர்கள் கூக்குர லிட்டனர். உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த மாரிமுத்து, குமார், பால் பாண்டி, முத்தையா, ஈஸ்வரன், கட்டமுத்து, முருகையா மற்றும் காரில் வந்த கோவையைச் சேர்ந்த உதயகுமார் (வயது19), வளர்மதி (42), லதா மகேஸ் வரி (27) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து பந்தல் குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News