செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர் சரிவு

Published On 2019-02-06 08:25 IST   |   Update On 2019-02-06 08:25:00 IST
கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். #Petrol #Diesel
சென்னை:

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் உச்சத்துக்கு சென்றது. அதன் பின்னர் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் 73 ரூபாய் 27 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 16 காசு குறைந்து, 73 ரூபாய் 11 காசுக்கு விற்பனை ஆனது.

ஒரு லிட்டர் 69 ரூபாய் 31 காசுக்கு நேற்று முன்தினம் விற்பனையான டீசல், நேற்று லிட்டருக்கு 11 காசு குறைந்து 69 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். #Petrol #Diesel
Tags:    

Similar News