செய்திகள்

கம்பம் அருகே கேரள பஸ் மீது கல் வீசிய அ.தி.மு.க. பிரமுகர்

Published On 2019-01-19 17:35 IST   |   Update On 2019-01-19 17:35:00 IST
கம்பம் அருகே கேரள பஸ் மீது கல் வீசிய அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ADMK
கூடலூர்:

கம்பம் அருகே கூடலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பொன்மலைச்சாமி (வயது45). அ.தி.மு.க. பிரமுகர். மேலும் கூடலூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து குமுளிக்கு கேரள அரசு பஸ் வந்தது. கூடலூர் பஸ் நிலையத்தில் நின்றபோது திடீரென பொன்மலைச்சாமி டிரைவரை பார்த்து சத்தம்போட்டார். மேலும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து ஆவேசமாக பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசரமாக கீழே இறங்கினர். அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷாஜகான் வழக்குப்பதிவு செய்து பொன்மலைச்சாமியை கைது செய்து கல் வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
Tags:    

Similar News