செய்திகள்

கள்ளந்திரி பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2019-01-19 08:05 GMT   |   Update On 2019-01-19 08:05 GMT
கள்ளந்திரி பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
கூடலூர்:

பருவமழை ஏமாற்றியதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இருந்த போதும் வைகை அணையில் இருந்து முறைநீர் பாசன வழியில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது கள்ளந்திரி பாசனத்துக்காக இன்று காலை முதல் 800 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. வைகை அணையின் நீர் மட்டம் 56.27 அடியாக உள்ளது. வரத்து 156 அடியாகவும், திறப்பு 860 கன அடியாகவும் உள்ளது. இருப்பு 2,927 மில்லியன் கன அடி.

இதே போல் பெரியாறு அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் முறை நீர் பாசன வழியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 155 கன அடி. திறப்பு 467 கன அடி. இருப்பு 2,412 மில்லியன் கன அடி.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 44.55 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 98.07 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 24 கன அடி.

Tags:    

Similar News