செய்திகள்

ராமநாதபுரத்தில் கலெக்டர் பங்களா பாதுகாப்பு பணியில் தூங்கிய போலீஸ்காரர்

Published On 2019-01-09 15:51 IST   |   Update On 2019-01-09 15:51:00 IST
ராமநாதபுரத்தில் கலெக்டர் பங்களா நுழைவு வாயில் முன்புள்ள அறையில் பாதுகாப்பு பணியின் போது தூங்கிய போலீஸ்காரர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #TNPolice
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே கலெக்டர் பங்களா உள்ளது. இங்கு தற்போதைய கலெக்டர் வீரராகவராவ் வசித்து வருகிறார். ஆயுதப்படை போலீசார் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ராஜாமுகமது என்ற ஆயுதப்படை போலீஸ்காரருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் நேற்று கலெக்டர் வீட்டின் நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது நுழைவு வாயில் முன்புள்ள அறையில் ராஜா முகமது பணி செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்தார். இது குறித்த தகவல் கலெக்டர் வீரராகவராவுக்கு தெரிய வந்தது.

அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போதும் ராஜா முகமது தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஜா முகமதுவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், பணியின்போது தூங்கிய போலீஸ்காரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNPolice
Tags:    

Similar News