உலகம்

நான் கோபமாக இருக்கிறேன்: உக்ரைன் மீது டிரம்ப் அதிருப்தி

Published On 2025-12-30 17:39 IST   |   Update On 2025-12-30 17:39:00 IST
  • அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது என ரஷியா குற்றம்சாட்டியது.
  • இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.

வாஷிங்டன்:

ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது என ரஷியாவின் வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டினார்.

இச்சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீது அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

ரஷிய அதிபர் புதின் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரது வீடு மீது தாக்குதல் நடந்ததாகக் கூறினார். இதனால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.

ஒரு நாட்டின் தலைவரின் வசிப்பிடத்தைத் தாக்குவது தவறு. இதுபோன்ற செயல்களுக்கு இது சரியான நேரம் அல்ல.

எனினும் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதை மீறி தாக்குதல் நடந்து இருந்தால் அது மிகவும் மோசமான விஷயம். தாக்குதல் நடத்ததா என்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடிப்போம்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு சில மிகவும் சிக்கலான பிரச்சனைகள் உள்ளன என தெரிவித்தார்.

உக்ரைன் ரஷியா இடையிலான போர் நிறுத்த முயற்சிகளுக்கு இந்தக் குற்றச்சாட்டு பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.  

Tags:    

Similar News