உலகம்

பதிலடி கடுமையானதாக இருக்கும்: டிரம்ப் எச்சரிக்கைக்கு ஈரான் அதிபர் பதில்

Published On 2025-12-30 18:55 IST   |   Update On 2025-12-30 18:55:00 IST
  • ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டத்த கட்டுவதாக கேள்விப்பட்டேன்.
  • அது உறுதியானால், விளைவுகள் மிகவம் சக்தி வாய்ந்ததாக இருக்கும்- டிரம்ப்.

இஸ்ரேல்- ஈரான் இடையில் சண்டை நடைபெற்றபோது, ஈரானில் உள்ள அணுசக்தி திட்டத்தை அமெரிக்கா போர் விமானம் மூலம் தாக்கி அழித்தது. பின்னர் இஸ்ரேல்- ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

ஈரான் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதற்கிடையே, ஈரான் அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டினால், அந்நாட்டை வீழ்த்துவோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டொனால்டு டிரம்ப் கூறுகையில் "தற்போது ஈரான் மீண்டும் அணுஆயுத திட்டங்களை கட்ட முயற்சி செய்து வருவதாக நான் கேள்விபட்டேன். அப்படி அவர்கள் செய்தால், நாங்கள் அவர்களை வீழ்த்த வேண்டியிருக்கும். அவர்களை வீழ்த்துவோம். அவர்களைச் சின்னாபின்னமாக்கி விடுவோம். ஆனால், அப்படி நடக்காது என்று நம்புகிறோம்.

திரும்ப கட்டுவது உறுதியானால், விளைவுகள் அவர்களுக்கு தெரியும். கடந்த முறையை விட மிகவும் சக்திவாய்ந்த விளைவாக இருக்கும்" என்றார்.

இந்த நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன், "எந்தவொரு கொடூரமான ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதில் கடுமையானதாகவும், அத்தகைய செயல்களைத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும்" என்றார். மேலும், நாங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு முழு அளவிலான போரில் இருக்கிறோம்; எங்கள் நாடு நிலையானதாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார்.

Tags:    

Similar News