செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2ல் தொடங்குகிறது- முதல் நாளில் ஆளுநர் உரை

Published On 2018-12-26 08:50 GMT   |   Update On 2018-12-26 08:50 GMT
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். #TNAssemblySession
சென்னை:

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம், பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக கடந்த 18-ம் தேதி ஆளுநர் அறிவித்தார்.



இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் ஜனவரி 2-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இக்கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீது விவாதங்கள் நடைபெறும். அதன்பின்னர், விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார். #TNAssemblySession

Tags:    

Similar News