செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்- இளங்கோவன் பேட்டி

Published On 2018-12-22 12:21 GMT   |   Update On 2018-12-22 12:21 GMT
கட்சி மேலிடம் விரும்பினால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #evkselangovan #parliamentelection

ஈரோடு:

தமிழக காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பிறந்தநாள் விழா ஈரோட்டில் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் இளங்கோவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

இன்று எனக்கு மிகவும் விசே‌ஷமான நாள். ஏனென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.

இது ராகுல் காந்தியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி ஆகும். ராகுல் காந்தியைப் பார்த்து பொடிப் பையன் என்று எள்ளி நகையாடுபவர்களுக்கு அவர் மரண அடி கொடுத்து 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்துள்ளார்.

இதன்மூலம் ராகுல்காந்தி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ஆளும் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குறுதியை எப்போதும் நிறைவேற்றியதில்லை .

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி என்னவாயிற்று?

எனவே இந்த சூழ்நிலையை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கு இப்போதே நாம் தயாராக இருக்க வேண்டும் .

நிச்சயமாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். 

இவ்வாறு இளங்கோவன பேசினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. ராகுல் காந்தி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.


தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். கட்சி மேலிடம் விரும்பினால் பாராளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #evkselangovan #parliamentelection

Tags:    

Similar News