செய்திகள்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காலிபிளவர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

Published On 2018-12-01 09:17 GMT   |   Update On 2018-12-01 09:17 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காலிபிளவர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தமிழ்நாட்டில் மிகப்பெரியது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா மற்றும் சுற்று வட்ட மாநிலங்களுக்கு அதிகமான காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது காய்கறிகளை இச்சந்தையில் வந்துதான் விற்பார்கள்.

தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பால் விளைச்சல் குறைந்து காய்கறி வரத்து குறைவானது.

தற்போது காலிபிளவர் மூலசத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், அத்திக்கோம்பை போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்தது. இப்பகுதியில் இருந்து அதிகமான விளைச்சலால் காலிபிளவர்கள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது.

ஆனால் விலை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 20 பூ கொண்ட ஒரு பை கடந்த மாதம் ரூ.250 முதல் 300 வரை விற்பனையானது. ஆனால் இப்போது ரூ.100க்கு மட்டுமே விலை கேட்கப்பட்டது.

மலை பகுதிகளில் இருந்து வரக்கூடிய ஒட்டு ரக காலிபிளர் பூக்கள் வராததால் நாட்டு பூக்கள் விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை குறைவாகவே இருந்தது. தற்சமயம் பனி மற்றும் மழை காலம் என்பதால் இந்த காலிபிளவர் பூக்களில் அழுகல் நோய் ஏற்பட்டு அதிகம் சேதமடைந்த நிலையிலும் காலிபிளவர் பூக்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.

எனினும் நாட்டு பூக்கள் விலை குறைவாக இருந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News