செய்திகள்

இந்து கடவுள் குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2018-12-01 10:06 IST   |   Update On 2018-12-01 10:06:00 IST
இந்து கடவுள் குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை என்று கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #Seeman
கோவை:

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இந்து கடவுள்களை இழிவாக பேசிய நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், எந்த தகுதியில்லாதவர் தகுதி நிறைந்த வி‌ஷயங்களை பேச கூடாது. சீமான் அரசியல், சமுதாயம் பேசட்டும் . ஆன்மீகம் மீது நம்பிக்கை இல்லையெனில் விட்டு விட வேண்டும். யாகவராயினும் நா காக்க வேண்டும். இதுபோல கேவலமான வார்த்தைகளை பேசுபவர்களை யோக்கியமற்றவர்களாக தான் கருத முடியும் என்றார்.


டெல்லியில் தமிழக விவசாயிகள் தமிழர்களின் மானத்தை வாங்கும் வகையில் போராட்டம் நடத்துவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இந்த போராட்டங்களுக்கு தமிழகத்தை சேர்ந்த சில கட்சிகள் நிதி உதவி செய்கிறார்கள். இதனை தமிழர் என்ற உணர்வோடு கண்டிக்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டுவது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. ஆய்வறிக்கை தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. கஜா புயல் நிவாரணம் குறித்து உள்துறை இணையமைச்சரிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல தகவல் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலைவாய்ப்பின்மை குறித்து ராகுல்காந்தி கருத்து குறித்து கேட்ட போது, காங்கிரஸ் கட்சியினருக்கு வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது என்றார்.

பின்னர் அவர் திருப்பூர் புறப்பட்டு சென்றார். #BJP #PonRadhakrishnan #Seeman 
Tags:    

Similar News