செய்திகள்

பாஜகவை எதிர்ப்பதற்காக ஓரணியில் திரண்டு வருகிறோம்- முத்தரசன்

Published On 2018-11-14 06:13 GMT   |   Update On 2018-11-14 06:13 GMT
மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக ஓரணியில் திரண்டு வருவதாக முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பதற்றத்தோடு உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான். அவர்கள் கூறிய வாக்குறுதிகள் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

சுதந்திரமாக செயல்படக் கூடிய சி.பி.ஐ., வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீட்டால் பல்வேறு முரண்பாடுகள் அதில் ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாகத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பா.ஜ. க.வை எதிர்ப்பதற்கும், 2019 தேர்தலுக்காகவும் ஒன்று கூடி வருகிறோம். 2019 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவது கிடையாது.

பாலியல் வன்முறைகள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையே அதற்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

இயற்கை சீற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். ஆனால் ‘கஜா’ புயலுக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினாலும் அவர்களுக்கு முறையாக நடவடிக்கை எடுப்பதற்கு நேரம், கால அவகாசம் இல்லை.


ரஜினிகாந்த் நல்ல நடிகர், ஆனால் அவர் அரசியல்வாதி கிடையாது. 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறது. மாநில அரசு 7 பேரின் விடுதலைக்கு அக்கறை காட்டவில்லை.

இலங்கையில் தொடர்ந்து ஜனநாயகப் படுகொலை நடந்து வருகிறது. தமிழர்களுக்கு அங்கு ஒருபோதும் பாதுகாப்பு கிடையாது. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு மவுனத்தை கலைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #BJP
Tags:    

Similar News