செய்திகள்

சூளைமேட்டில் நிமோனியா காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தை பலி

Published On 2018-10-29 07:25 GMT   |   Update On 2018-10-29 07:29 GMT
சூளைமேட்டில் நிமோனியா காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:

சென்னை சூளைமேடு காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது 1½ வயது மகள் சிவஸ்ரீ.

கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.

காய்ச்சல் தீவிரமானதால் நேற்றிரவு எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் எழும்பூர் குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மருத்துவ மனையின் இயக்குனர் அரசர் சீரளாளர் கூறியதாவது:-

“குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. குழந்தையின் நுரையீரலில் சளி பாதிப்பு அதிகமாக இருந்ததால் சுவாசிக்க முடியாமல் உயிர் இழந்துள்ளது. குறித்த நேரத்தில் வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்.

பல இடங்களுக்கு சென்றுவிட்டு நோய் பாதிப்பு முற்றிய நிலையில் வந்ததால் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

நிமோனியா காய்ச்சலில் உயிர் இழந்த குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். டெங்கு பாதிப்பால்தான் தங்கள் குழந்தை இறந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News