செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் இல்லை- கலெக்டர் வீரராகவராவ்

Published On 2018-10-25 11:43 GMT   |   Update On 2018-10-25 11:43 GMT
டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உள்ள அக்கிரமேசி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு நேரடியாகச் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு என ஒவ்வொரு பிரிவாக நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் பரவலாக மழை பெய்து வருவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழ்நிலையினாலும் அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை காலத்தில் ஏற்படக் கூடிய டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவா மல் தடுப்பதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல் அமைச் சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களின் ஒருங்கிணைப்பில் பாது காப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனைகள், 58 அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள் அனைத்திலும் காய்ச் சலுக்கான சிறப்பு பிரிவு செயல்படுத்தப்பட்டு, தனிக்கவனம் செலுத்தப் பட்டு சிகிச்சை வழங்குவ தோடு தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட் டத்தில் தற்போது வரை டெங்கு வைரஸ் காய்ச் சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பு கள் ஏதுமில்லை. இருப்பி னும் இத்தகைய வைரஸ் காய்ச்சல்களை பரவா மல் தடுப்பதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மருத்துவப்பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் முல்லைக்கொடி, இணை இயக்குநர் பொது சுகாதாரத் துறை, சென்னை (மாவட்ட பொறுப்பு அலுவலர்) டாக்டர் சோமசுந்தரம், துணை இயக்குநர் (பரமக் குடி) டாக்டர் மீனாட்சி, பரமக்குடி அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் டாக்டர் நாகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்து வர்கள் உடனிருந்தனர். #tamilnews
Tags:    

Similar News