இன்றைய ராசிபலன் 22.12.2025: இவர்களுக்கு யோகமான நாள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் ஏற்படும்.
ரிஷபம்
உடல் நலனில் கவனம் தேவைப்படும் நாள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
மிதுனம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.
கடகம்
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் உண்டு.
சிம்மம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். ஆயினும் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் சில தடுமாற்றங்கள் ஏற்படலாம்.
துலாம்
தொட்ட காரியம் வெற்றி பெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்த உத்தியோக முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும்.
விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் நடைபெறும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் சிலர் நாடி வந்து உதவிசெய்வர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மகரம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். தைரியத்தோடும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மீனம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக முடியும். பிள்ளைகளின் கல்வி நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.