விளையாட்டு

வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ்: சாம்பியன் பட்டம் வென்ற ஜோஷ்வா சின்னப்பா, வீர் சோட்ரானி

Published On 2025-12-22 00:26 IST   |   Update On 2025-12-22 00:26:00 IST
  • சிசிஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.
  • இதில் பெண்கள் ஒற்றையரில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்.

மும்பை:

சிஐஐ வெஸ்டர்ன் இந்தியா ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடைபெற்றது.

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, சன்யா வார்ஸ் உடன் மோதினார். இதில் ஜோஷ்னா 7-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதேபோல், ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் உடன் மோதினார். இதில் வீர் சோட்ரானி 11-9, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

Similar News