செய்திகள்

அ.தி.மு.க.வின் தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - நடிகை குஷ்பு தாக்கு

Published On 2018-10-07 12:09 IST   |   Update On 2018-10-07 12:09:00 IST
அ.தி.மு.க.வின் தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் தள்ளிவைத்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Khushboo #ElectionCommission

சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பலகட்ட தேர்தல்களை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் மழை அல்ல. அ.தி.மு.க.வால் ஜெயிக்க முடியாது. இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் அந்த கட்சி ஜெயிக்கப்போவதில்லை.

காரணம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி அல்ல இது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் திணிக்கப்பட்டவர்கள். மக்கனால் அவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனை ரகசியமாக சந்தித்ததை இருவரும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் இருவரும் வெவ்வேறு காரணங்களை கூறி இருக்கிறார்கள். ஏன் சந்தித்தார்கள் என்பதை அவர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.


அவர்களால் ஒன்றாக பணியாற்றவும் முடியவில்லை. எதையும் எதிர் கொள்ள தைரியம் வேண்டும். எங்காவது, ஏதாவது உதவி கிடைக்குமா? என்று ஒவ்வொருவரின் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நுழைய பார்க்கிறது பா.ஜனதா. நேரடியாக வர முடியா விட்டாலும், பின்வாசல் வழியாக புகுந்துவிட ஆசைப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Khushboo #ElectionCommission

Tags:    

Similar News