செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 3-பேர் கைது

Published On 2018-10-01 14:32 GMT   |   Update On 2018-10-01 14:32 GMT
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் காவேரிப்பட்டணம் கொசமேடு சினிமா தியேட்டர் பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்த அப்பாசாமிநாயுடு தெருவை சேர்ந்த கார்த்திகேயண்(வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த பணம்ரூ100 மற்றும் 5 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடதக்கது.

இதேபோல் பாரூர் மற்றும் போச்சம்பள்ளி போலீசார் புலியூர், போச்சம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த புலியூர் பகுதியை சேர்ந்த முகமது(39), காவேரிப்பட்டணம் அன்னாநகர் செவுகத் பாஷா(42) என்பவர்களிடமிருந்து தலா 5 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News