செய்திகள்

இரட்டை இலை வழக்கு- வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

Published On 2018-09-07 08:08 GMT   |   Update On 2018-09-07 08:08 GMT
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அரவிந்த்குமார் அமர்விலிருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. #TwoLeaves
சென்னை:

இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் தற்போது வரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு ஏற்கனவே பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு விசாரித்து வந்தது.

இந்தநிலையில் தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு தற்போது அரவிந்த் குமார் அமர்வில் இருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TwoLeaves
Tags:    

Similar News