செய்திகள்
கோப்புப்படம்

மதுரையில் மாட்டுவண்டியில் மணமக்கள் ஊர்வலம்- பொதுமக்கள் ஆச்சரியம்

Published On 2018-08-24 16:59 IST   |   Update On 2018-08-24 16:59:00 IST
மதுரையில் இன்று திருமணம் நடந்த மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மதுரை:

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது எளிமையாகவும், வித்யாசமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப திருமணங்கள் நடந்து வருவதால் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடப்பது மறைந்து வருகிறது.

அனைவரும் வியக்கும் வகையில் திருமணம் இருக்க வேண்டும் என்பதற்காக ஹெலிகாப்டரில் திருமணம், பறக்கும் பலூனிலும், அந்தரத்தில் தொங்கியபடியும் என புதுமையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் கலாச்சாரத்தை வலியுறுத்தும் படி மதுரையில் இன்று ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.

மதுரையை சேர்ந்த விஜய குமார்-காயத்ரி திருமணம் இன்று நடந்தது. பின்னர் மணமக்கள் ஊர்வலம் நடந்தது. இதில் புதுமையாக மணமகன் மாட்டுவண்டியை ஓட்டிவர, அருகில் மணமகள் அமர்ந்து ஊர்வலம் வந்தனர்.

ஊர்வலத்தில் உறவினர்களும், நண்பர்களும் திரளாக கலந்து கொண்டனர். மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
Tags:    

Similar News