செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள்: ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேச்சு

Published On 2018-07-26 12:09 GMT   |   Update On 2018-07-26 12:09 GMT
அ.தி.மு.க. வின் திட்டங்களை கட்சியினர் வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வரும் மக்களவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசினார்.

திருப்பரங்குன்றம்:

மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் ரமேஷ் பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் வாரியத்தலைவர் பூமி பாலகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

1972 முதல் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக உள்ளது. அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சியை வழி நடத்தி மக்கள் நலத் திட்டங்களை குறை வில்லாமல் சிறப்புடன் செய்து வருகின்றனர். தாலிக்கு தங்கம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் பொது மக்களை தேடி செல்கிறது.

இதுபோன்ற அ.தி.மு.க. வின் திட்டங்களை கட்சியினர் வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வரும் மக்களவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சந்திரன், முன்னாள் அறங்காவலர் பாரி, ஜெயக்குமார், கிருஷ்ணன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News